இலங்கை- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான நடக்க உள்ள போட்டிகளில் இலங்கையில் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் மென்டிஸ், ஜெயசூர்யா ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரு அணிகள் இடையே நடந்த இரண்டாவது டி-20 போட்டியின் போது, மேற்குறிய இரு வீரர்களும் காயமடைந்தனர். இதனாலேயே இந்த இரு வீரர்களும் அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மென்டிஸ், ஜெய சூர்யா இருவருக்கும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கான ஸ்கேன் அறிக்கையில் வந்த பின்னர் அவர்களது சிகிச்சை குறித்து தெரிவிக்கப்படும். எனினும், இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக வேறு எந்த வீரர்களும் சேர்க்கபட வில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு அணிகள் இடையே நடந்து வுரம் போட்டியில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.