சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கோவா நீச்சல் பயிற்சியாளர் சுர்ஜித் கங்குலியை பணி நீக்கம் செய்து இந்திய நீச்சல் கூட்டமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து இந்திய நீச்சல் கூட்டமைப்பின் தலைவர் திகம்பர் காமத் தெரிவிக்கையில்,
கோவா நீச்சல் பயிற்சியாளர் சுர்ஜித் கங்குலி, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதரங்கள் ஆன்லைனில் பரவ தொடங்கியதை தொடர்ந்து அவரை உடனடியாக பணி செய்துள்ளோம். இருந்தாலும் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்று இன்னும் தெரியவில்லை என்றார்.