விளையாட்டை ரசித்திருந்த சிறுமி! 14 அடி உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!

galary

சாவ்பாவ்லோ: கால்பந்து மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சிறுமி, 40 அடி உயரம் கொண்ட கேலரியிலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் கால்பந்து மைதானம் ஒன்று உள்ளது. அந்த மைதானத்தில் சாவ் பாலே, ஜெரிமோ ஆகிய அணிகள் மோதின. சாவ்பாலோ அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எக்கச்சக்கம். எனவே, இரு அணிகளின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. வீரர்கள் விளையாடி கொண்டிருந்தனர். பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த இந்த போட்டியில் கால்பந்து வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.

அப்போது மைதானத்தில் 40 அடி உயரத்திலிருந்த கேலரியின் தடுப்புக்கு அருகில் 13 வயது சிறுமி ஒருவர் உற்சாகமாக ஆடியபடியே விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நிகழ்ந்தது.

அந்த சிறுமி கால் தவறி கீழே, அதுவும் தலைகீழாக விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை உடனே சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

சோதனையில், 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பி உள்ளார். பெரிய காயங்கள் எதுவும் இல்லை. உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த சிறுமி யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. அவருடன் வந்தவர்கள் யார் என்ற விவரமும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :