Home இந்தியா பிவி சிந்துவுக்கு ஒரு நல்ல செய்தி!விசாகப் பட்டினத்தில் நிலம் ஒதுக்கீடு!

பிவி சிந்துவுக்கு ஒரு நல்ல செய்தி!விசாகப் பட்டினத்தில் நிலம் ஒதுக்கீடு!

pv sindhu
pv sindhu
  • வரப்போகும் கேபினட் கூட்டத்தில் இடத்தை தீர்மானிக்கும் வாய்ப்பு.
  • இந்திய பேட்மிட்டன் ஸ்டார் விளையாட்டு வீராங்கனை பிவி சிந்துவின் வேண்டுகோளை ஜெகன் அரசாங்கம் ஏற்றுள்ளது.

பிவி சிந்து ஏற்படுத்தப்போகும் பேட்மிட்டன் அகாடமிக்கு நிலம் ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இந்த அகாடமி ஏற்படுத்துவதற்கு தேவையான நிலங்களை ஒதுக்கப்போகிறது. இது தொடர்பான பரிந்துரையை வரப்போகும் அமைச்சர்களின் கூட்டத்தில் ஆமோதிக்கும் வாய்ப்பு உள்ளது.

மாநிலத்தில் பேட்மிட்டன் வளர்ச்சி அடையச் செய்வதற்கு அகாடமி ஏற்படுத்த நினைத்துள்ளோம் என்றும் அதற்கு தேவையான நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் சென்ற ஆண்டு செப்டம்பரில் பிவி சிந்து முதலமைச்சர் ஒய் எஸ் ஜகன் மோகன் ரெட்டியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். நிலத்தை ஒதுக்குவோம் என்று அப்போது அவர் வாக்குறுதியளித்தார்.

அதற்கு தொடர்பாக விசாகப்பட்டினத்தில் பேட்மிட்டன் அகாடெமி அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்வதாக சுற்றுலா விளையாட்டு துறை அமைச்சர் அவந்தி சீனிவாஸ் தெரிவித்தார். எந்த இடத்தில் எத்தனை பூமியை கொடுக்கப் போகிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசாங்கம் பார்வையை செலுத்தியுள்ளது என்றும் கிராமீண அளவில் மின்னல் போன்ற விளையாட்டு வீரர்களை தயார் செய்வோம் என்றும் கூறினார். இதற்கான விளையாட்டு முறையை விரைவிலேயே அறிவிப்போம் என்றும் அவந்தி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

அதில் ஒரு பகுதியாகவே பிவி சிந்து அகாடமிக்கு நிலத்தை ஒதுக்கப் போகிறோம் என்று கூறினார். சுற்றுலா மையங்களை விரைவிலேயே திறந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்போம் என்று கூறினார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு படகு சவாரிக்குக் கூட அனுமதி அளிக்கப் போவதாக தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை தலைமையில் மாநிலத்தில் ஹோட்டல்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆலோசனை இருப்பதாகவும் அது குறித்து விவாதித்து வருவதாகவும் கூறினார். ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று அவந்தி சீனிவாஸ் கூறினார். சிம்ஹாசலம் பிரசாத திட்டதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ஆனந்தமாக இருக்கிறது என்றார்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சங்கடமான சூழ்நிலை சுற்றுலா துறை மீது ஆழமான தாக்கம் காட்டியுள்ளது என்று அவர் கூறினார். அதிலிருந்து மீள்வதற்கு கொஞ்சம் காலம் ஆகலாம் என்று அபிப்பிராயம் தெரிவித்தார். ஆனாலும்
பொருளாதார குறைவு இல்லை என்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தும் வசதிகளில் எந்தவித குறைவும் இருக்காது என்றும் வாக்குறுதி அளித்தார். சுற்றுலாவுக்கான பஸ்களை கூட விரைவிலேயே உபயோகத்திற்கு எடுத்து வருவோம் என்றும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version