Homeசற்றுமுன்51வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஜவகல் ஸ்ரீநாத்!

51வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஜவகல் ஸ்ரீநாத்!

srinath
srinath

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஜவகல் ஸ்ரீநாத் இன்று தமது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிடித்த பதிவுகளின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

மைசூர் எக்ஸ்பிரஸ் என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப் படும் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு மைசூர் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று மலர்க்கொத்து கொடுத்து, பிறந்த நாள் வாழ்த்துகள் கூறினர்.

இப்போது இந்திய அணியில் பல வேகப் பந்து வீச்சாளர்கள் உருவாகிவிட்டனர். ஆனால், 1990களில் இந்திய அணியில் ஒரே ஒரு வேகப் பந்து வீச்சாளரே இருந்தார். அவர் ஸ்ரீநாத். அன்றைய கால கட்டத்தில் 92 உலகக் கோப்பையுடன் சீனியர் தலைகள் சென்றுவிட, அடுத்த கட்டமாக இந்திய அணிக்கு பெரும் பலமாக விளங்கிய இளையவராகத் திகழ்ந்தவர் ஜவகல் ஸ்ரீநாத். ஒல்லியான தேகம், துருதுரு பார்வை, வேகமான பந்து வீச்சு, இளமையான தோற்றம் எல்லாம் ஸ்ரீநாத்துக்கு ஓர் இடத்தைக் கொடுத்திருந்தது.

ஜஸ்பிரீத் பும்ரா , இஷாந்த் சர்மா , முகமது ஷமி , உமேஷ் யாதவ் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி இன்று துடிப்பான வேகப்பந்து வீச்சைக் கொண்டுள்ளது . ஆனால், இந்திய அணி பாரம்பரியமாக எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்கவில்லை! பெரும்பாலும் நடுத்தர வேகப் பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களையே கொண்டிருந்தது. அந்த நேரத்தில், 90 களின் தொடக்கத்தில் கபில்தேவ் தொடங்குவது போன்ற ஆக்ரோஷத்தை போட்டிகளில் புகுத்தி அறிமுகம் செய்தவர் ஸ்ரீநாத்.

கபில் தேவ் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றாலும் அவர் ஒரு ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சாளராகவே இருந்தார். கபில் தேவ் ஓய்வு பெற்ற பின்னர் 1990 களில் நாட்டின் வேகப்பந்து வீச்சுத் துறையின் சுமையை சுமந்த இந்தியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஜவகல் ஸ்ரீநாத்!

மைசூரைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர்! 1989 ல் செகந்திராபாத்தில் தனது முதல் தர போட்டியின் அறிமுகத்திலேயே ஹாட்ரிக் எடுத்தார். அவருக்கு இன்று 51 வயது! ​​

அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் ஐந்தாவது அதிகட்பட்ச விக்கெட் எடுத்துள்ள பேஸர்!

அக்டோபர், 1991 முதல் மார்ச் 2003 வரை நீடித்த சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளர்களிடையே ஐந்தாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்ரீநாத்! க்ளென் மெக்ராத் (699 விக்கெட்), வக்கார் யூனிஸ் (671), வாசிம் அக்ரம் (640) ஆலன் டொனால்ட் (602) இந்த கால கட்டத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.

200 டெஸ்ட் விக்கெட்டுகளின் மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் (கபில் தேவிற்குப் பிறகு) ஸ்ரீநாத். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தின் தொடக்க டெஸ்டில் ப்ளூம்பொன்டைனில் அவர் இந்த சாதனையை அடைந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன், டிம் சௌதி, பாப் வில்லிஸ், கர்ட்னி வால்ஷ், மோர்ன் மோர்கல், பீட்டர் ஸ்டில், ஸ்டூவர்ட் பிராட் போன்றவர்களை விட அவர் 54 டெஸ்ட் போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை எட்டினார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 பிளஸ் விக்கெட்டுகளை வீழ்த்திய 13 பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்ரீநாத். இந்த சாதனையை நிகழ்த்திய இன்னொரு இந்தியர் அனில் கும்ப்ளே.

https://twitter.com/search?q=%23javagalsrinath&src=trend_click&vertical=trends

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,352FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பிரேவ்’க்கு பின்னர்25 வருடங்களுக்கு கழித்து படம் இயக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ..

ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 'தி பிரேவ்'க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும்...

ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளபொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம்...

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

Latest News : Read Now...