ஏப்ரல் 23, 2021, 7:48 காலை வெள்ளிக்கிழமை
More

  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி!

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  australia-team
  australia-team

  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 374 ரன்களை எடுத்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்களை மட்டுமே எடுத்தது.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

  முதல் போட்டி சிட்னியில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் (114), ஸ்டீவ் ஸ்மித் (105), டேவிட் வார்னர் (69) சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

  கடின இலக்கை விரட்டிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் (22), கேப்டன் விராத் கோஹ்லி (21), ஸ்ரேயாஸ் ஐயர் (2), லோகேஷ் ராகுல் (12) ஆகியோர் வரிசையாக ஏமாற்றினர். ஷிகர் தவான் (74), ஹர்திக் பாண்ட்யா (90) அரைசதம் கடந்து ஓரளவு கௌரவமான ஸ்கோர் பெற உதவினர். எனினும், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »