ஏப்ரல் 14, 2021, 7:37 மணி புதன்கிழமை
More

  டி20 இறுதிப் போட்டியில் தோல்வி; தொடர் வென்ற கோப்பையுடன் இந்திய அணி!

  பாண்டியா தனது விருதினை நடராஜனிடம் வழங்கினார்! வெற்றிக் கோப்பையையும் நடராஜனிடம் வழங்கினார் கேப்டன் கோலி

  indian-team-won-t20-series-against-australia-with-2-1
  indian-team-won-t20-series-against-australia-with-2-1

  சிட்னியில் நடந்த இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 20 ஓவர் முடிவில் 174/4 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா தனது விருதினை நடராஜனிடம் வழங்கினார்! வெற்றிக் கோப்பையையும் நடராஜனிடம் வழங்கினார் கேப்டன் கோலி!

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த கடைசிப் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.

  இன்று, மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதன்படி, முதலில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது.

  187 ரன் என கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்றிருந்த இந்திய அணி ‘டி-20’ தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  twelve − 10 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »