ஏப்ரல் 22, 2021, 6:57 மணி வியாழக்கிழமை
More

  ‘விராட் கோலிக்கும் டி.நடராஜனுக்கும் வெவ்வேறு விதிகள், அஸ்வின் பேசியதால் அவதிப்பட்டார்’: சுனில் கவாஸ்கர்

  அணியில் உள்ள வீரர்களிடையே நிர்வாகம் பாகுபாடு காட்டியதாக பி.சி.சி.ஐ மற்றும் தற்போதைய அணி நிர்வாகத்தைக் குறித்து

  gavaskar-kohli-natarajan
  gavaskar-kohli-natarajan

  இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு இருப்பதைக் குறிக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புதன்கிழமை நேற்று அணிக்குள் வீரர்களிடம் பாகுபாடு காட்டப் படுவதாகக் கூறினார். அணியில் உள்ள வீரர்களிடையே நிர்வாகம் பாகுபாடு காட்டியதாக பி.சி.சி.ஐ மற்றும் தற்போதைய அணி நிர்வாகத்தைக் குறித்து குற்றம் சாட்டினார் சுனில் கவாஸ்கர். இந்நிலையில், கவாஸ்கரின் இந்தக் கருத்துக்கு விராட் கோலியின் ரசிகர்கள் காரசாரமாக எதிர்ப்புக் கருத்துகளை சமூகத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

  தற்போதைய இளம் ஸ்டார் டி நடராஜன் மற்றும் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் குறித்து சுட்டிக் காட்டி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது இந்திய அணியில் இரட்டை தரநிலைகள் உள்ளன என்று கூறினார்.
  ஸ்போர்ட் ஸ்டார் கட்டுரையில் , கவாஸ்கர், இந்திய டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அணி கூட்டங்களில் தனது மனதைத் திறந்து வெளிப்படையாகப் பேசியதற்காக நீண்ட காலமாக அவதிப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

  இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிகள், சலுகைகள் இருக்கின்றன என்று கவாஸ்கர் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  ஒரு போட்டியில் அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் ஓரங்கட்டப்படுவார். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் பேட்ஸ்மென்களுக்கு இருப்பதில்லை என்று அஸ்வின் குறித்து அவர் குறிப்பிடுள்ளார்.

  டி. நடராஜன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சில நாட்களிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையானார். ஆனால் அவர் யுஏஇ.,யில் ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு வந்துவிட்டார். அவர் இன்னும் தன் மகளை பார்க்கவில்லை. ஆனால் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தன் முதல் குழந்தை பிறக்கும் தருணத்தில் தன் மனைவியின் அருகே இருக்க வேண்டும் என இந்தியா சென்றுவிட்டார்.

  நடராஜனும் தன் முதல் குழந்தையை இன்னும் பார்க்கவில்லை. அணியில் உறுப்பினராகக் கூட அவர் இல்லை, ஆனால் ஆஸ்திரேலியா போட்டிக்காக நெட் பவுலராக இருக்க வைக்கப்பட்டுள்ளார். எனவே அனைத்து போட்டிகளும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் முடிவடைந்த பிறகே நடராஜன் தன் மகளைப் பார்க்க முடியும் என்று அவர் நடராஜன் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

  முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மேலும் குறிப்பிடுகையில், “350 க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளைக் கொண்ட ஒரு பந்து வீச்சாளரை வேறு எந்த நாடும் வரவேற்கும், அவரது நான்கு டெஸ்ட் போட்டிகள் சதங்களையும் மறந்துவிடக் கூடாது. இருப்பினும், ஓர் ஆட்டத்தில் அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், அடுத்த ஆட்டத்திற்கு அவர் ஓரங்கட்டப்படுவார். ஆனால், பேட்ஸ்மேன்களுக்கு அது நடக்காது. ஓர் ஆட்டத்தில் அவர்கள் தோல்வியடைந்தாலும், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பும், இன்னொரு வாய்ப்பும் வரிசையாகக் கிடைக்கிறது, ஆனால் அஸ்வினுக்கு அந்த விதிகள் பொருந்தவில்லை.

  தற்போது சிகப்பு-பந்து வடிவத்தில் மட்டுமே தனது பங்களிப்பை வழங்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், குறுகிய டி20 வடிவங்களிலிருந்து முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார், பின்னர் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் அவரது திறமையை நிரூபித்த போதும், அவர் கைவிடப்பட்டுள்ளார்.

  ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் 370 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் நான்காவது அதிக விக்கெட் எடுத்த வீரர். ஒருநாள் போட்டிகளில், அவர் 111 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், டி 20 போட்டிகளில், 46 ஆட்டங்களில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  கேப்டன் கோலி மற்றும் புதுமுகம் நடராஜன் ஆகியோருக்கு வெவ்வேறு விதிகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கவாஸ்கர், முதல் டெஸ்டுக்குப் பிறகு தந்தைக்கான விடுப்பைக் காரணம் காட்டி கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அவர்கள் எவ்வாறு அனுமதித்தார்கள் என்று கேட்டு, அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.

  “விதிகள் குறித்துப் பார்த்தால், மற்றொரு வீரர் நடராஜன். அவர் ஒரு புதியவர். டி 20 தொடரில் அற்புதமாக அறிமுகமான இடது கை யார்க்கர் நிபுணர். ஹார்டிக் பாண்ட்யா, ஆஸ்திரேலியாவுடனான டி 20 தொடரின் பரிசை அவருடன் பகிர்ந்து கொள்ள முன்வந்தார்! ஐபிஎல் பிளேஆஃப்கள் நடந்து கொண்டிருந்தபோது முதல் முறையாக அவர் ஒரு தந்தையானார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவரது அற்புதமான ஆக்‌ஷனைப் பார்த்து, டெஸ்ட் தொடரில் தொடர்ந்து இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார், ஆனால் அணியின் விளையாட்டு வீரராக அல்ல, நெட் பந்து வீச்சாளராக இருந்தார். அதை கற்பனை செய்து பாருங்கள் ” என்று எழுதியுள்ளார் கவாஸ்கர்!

  இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் மூன்று ஒருநாள், மூன்று டி 20 போட்டிகள் முடிந்துள்ளன. நான்கு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி முடிந்துள்ளது. இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது, ஆனால் டி20 தொடரை வென்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் மிக மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. அடுத்து இரண்டாவது – ‘டெஸ் போட்டி டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »