Home அடடே... அப்படியா? அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் அசோக் திண்டா..!

அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் அசோக் திண்டா..!

ashok-tinda
ashok tinda picture curtesy bcci twitter page

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த அசோக் திண்டா அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அது குறித்து தகவல் தெரிவித்துள்ள பிசிசிஐ அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துவதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

வேகப்பந்து வீச்சில் புதிய பரிணாமத்தை காட்டியவர் திண்டா. மேற்கு வங்க அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய அசோக் திண்டா மேற்கு வங்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை குவித்தவர். வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டவர்.

இந்திய அணியில் இடம் பெற்று குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தாலும் தனி முத்திரை பதித்தவர் அசோக் திண்டா. 116 முதல் தர போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் இது ஒரு நல்ல பந்து வீச்சாளர் என்பதையே அவரை வெளிக்காட்டுகிறது

வங்க அணிக்காக விளையாடிய போதும் சரி இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய போதும் சரி அவர் மீது விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன பல்வேறு விமர்சனங்களையும் கடந்து, அவர் சாதனைகளை படைத்துள்ளார் என்று ட்விட்டர் பதிவுகளில் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

116 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகளும் 98 ஏ பிரிவு போட்டிகளில் 151 விக்கெட்டும் 147 முதல் தர டி20 போட்டிகளில் 151 விக்கெட்டும், 13 ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் 9 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்

https://twitter.com/MSDhoniRules/status/1356854243924213761

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version