August 2, 2021, 4:35 am
More

  ARTICLE - SECTIONS

  யூரோ 2021: உக்ரைன் பெற்ற வெற்றி!

  இப்போது நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரியா விளையாடும் ஆட்டத்தை நம்பியுள்ளது, இல்லையெனில் அவர்கள் யூரோ 2020இல்

  euro cup 2021
  euro cup 2021

  யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  இன்று மூன்று ஆட்டங்கள் நடந்துள்ளன. இன்றைய போட்டிகள்
  (1) உக்ரேன் வடக்கு மாசிடோனியா இடையிலான குரூப் சி போட்டி புகாரெஸ்டில் 17.06.2021 அன்று மாலை இந்திய நேரப்படி 18.30 மணிக்கு நடந்தது.
  (2) குரூப் பி ஆட்டம் டென்மார் பெல்ஜியம் இடையில் 17.06.2021 அன்று இந்திய நேரப்படி இரவு 21.30 மணிக்கு கோபநேகன் நகரில் நடந்தது.
  (3) குரூப் சி போட்டி, நெதர்லாந்து ஆஸ்திரியா இடையே 18.06.2021 அன்று 0030 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்றது.

  உக்ரைன் பெற்ற வெற்றி

  euro ukrain macedonia
  euro ukrain macedonia

  உக்ரைன் vs வடக்கு மாசிடோனியா குரூப் சி-யில் இன்று வட மாசிடோனியா இப்போது நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரியா விளையாடும் ஆட்டத்தை நம்பியுள்ளது, இல்லையெனில் அவர்கள் யூரோ 2020இல் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணியாக இருப்பார்கள்.

  ஏஞ்சலோவ்ஸ்கியின் மாசிடோனிய அணி வீரர்கள் அடுத்து வரும் திங்களன்று நெதர்லாந்தின் ஃபிராங்க் டி போயரை எதிர்கொள்ள வேண்டும். அதே நாளில் உக்ரைன் ஆஸ்திரியாவை எதிர்த்து ஆடும்.

  உக்ரைன் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து ஆறு ஆட்டங்களாக வெற்றிபெறவில்லை. இன்று வட மாசிடோனியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் தோல்விப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. முதல் பாதியில் ஷெர்மெங்கோவின் அணிக்கு யர்மொலென்கோ மற்றும் யாரெம்சுக் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை அளித்தனர். பாண்டேவ் காயம் காரணமாக வெளியேறினார்.

  இரண்டாவது பாதியில், அலியோஸ்கி அடித்த பெனால்டி கார்னர் புஷ்சனால் காப்பாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக ஒரு கோலை அவர் அடித்தார். மீதமிருந்த ஆட்டத்தில் வடக்கு மாசிடோனியாவால் கோலடிக்க முடியவில்லை. இதனால் உக்ரைன் மாசிடோனியாவை 2-1 கோல் கணக்கில் தோற்கடித்து.

  டென்மார்க் Vs பெல்ஜியம்

  euro denmark belgium
  euro denmark belgium

  இன்று மாலை கோபன்ஹேகனில் நடந்த ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தில் டென்மார்க்கை வீழ்த்திய பின்னர் பெல்ஜியம் யூரோ 2020இன் கடைசி -16 அணிகளுள் ஒன்றாகிவிட்டது. முதலில் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு ஒரு நிமிட நேரம் கைதட்டி வாழ்த்துக்கள் செலுத்தப்பட்டது. டேனிஷ் மிட்பீல்டர், எரிக்சன் பின்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் கடந்த வார இறுதியில் ஆடுகளத்தில் அவர் சந்தித்த மாரடைப்பிற்குப் பிறகு மீண்டு வருகிறார்.

  முதல் பாதியில் டென்மார்க் அவர்களின் மதிப்பிற்குரிய எதிரிகளை விட முன்னணியில் இருந்தனர். அவர்களின் அணி வீரர் யூசுப் பால்சனின் ஆட்டம் தொடங்கி இரண்டு நிமிடத்திற்குள் ஒரு கோல் அடித்தார். இருப்பினும், மீண்டும் ஆடத் தகுதி பெற்ற கெவின் டி ப்ரூயினின் அறிமுகம் ஆட்டத்தைத் திசை திருப்பியது, ஏனெனில் மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் அவர் தோர்கன் ஒரு கோல் அடிக்க துணை நின்றார். இந்த கோல் 54ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்ட்து. பின்னர் அவரே மற்றொரு கோலை 70ஆவது நிமிடத்தில் அடித்தார்.

  இதன் விளைவாக பெல்ஜியம் குழு B இன் முதலிடத்தையும், நாக் அவுட் கட்டத்தில் தங்களின் இடத்தையும் உறுதி செய்கிறது, ஆனால் டென்மார்க், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் நிலையை அறிந்துகொள்ள இந்தச் சுற்றின் இறுதி ஆட்டங்களுக்குச் செல்கின்றன.

  நெதர்லாந்து vs ஆஸ்திரியா

  euro netherland austria
  euro netherland austria

  ஆர்வமற்ற ஆஸ்திரியாவை எதிர்த்து நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதுடன், யூரோ 2020இன் அடுத்தகட்ட ஆட்டத்தை நோக்கி நெதர்லாந்து நகர்ந்துள்ளது. டென்ஸல் டம்ஃப்ரைஸ் இரு கோல்களிலும் பங்களித்திருந்தார்.

  ஆஸ்திரியா கேப்டன் டேவிட் அலபா டம்ஃப்ரைஸின் காலை மிதித்ததால் வீடியோ உதவி நடுவரின் தலையீட்டைத் தொடர்ந்து நடுவர் ஓரெல் கிரின்ஃபீல்ட் நெதர்லாந்திற்கு ஒரு பெனால்டி ஷாட் கொடுத்தார். அது ஒரு கோலாக மாறியது. டம்ஃப்ரைஸ் போட்டியின் தனது இரண்டாவது கோலை அடித்தபோது நெதர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

  போட்டியில் கோலடிப்பதற்கு சில நெருக்கமான தருணங்கள் இருந்தன. நெதர்லாந்து 60ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்திருக்க வேண்டும்.

  ஆனால் ஆஸ்திரிய கோல்கீப்பரான பஸ்மேன் கோலைத் தடுத்தார். பந்து ஒரு சில கெஜம் தொலைவில் இருந்த நெதலாந்து வீரர் டி லைட்டு இடம் விழுந்தது. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. நெதர்லாந்து ஆஸ்திரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,336FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-