spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்யூரோ 2021: ஃபிரான்சு அதிர்ச்சித் தோல்வி!

யூரோ 2021: ஃபிரான்சு அதிர்ச்சித் தோல்வி!

- Advertisement -
euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள்
மூன்றாம் நாள்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நேற்று யூரோ 2020இல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டி 28 ஜூன் 2021 அன்று இந்திய நேரப்படி 2130 மணிக்கு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள பார்கன் ஸ்டேடியத்தில் ஸ்பெயினுக்கும் குரோஷியாவுக்கும் இடையே நடைபெற்றது.
இரண்டாவது போட்டி பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து இடையே ருமேனியாவின் புகாரெஸ்டில் உள்ள தேசிய அரங்கில் 29 ஜூன் 2021 அன்று அதிகாலை இந்திய நேரப்படி 0030 மணிக்கு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சுவிட்சர்லாந்து ஃபிரான்சைத் தோற்கடித்து மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஸ்பெயின் vs குரோஷியா (ஸ்பெயின் வெற்றி, 5-3)

மிகவும் மோசமாக ஆடிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட ஆல்வாரோ மொராட்டா மற்றும் மைக்கேல் ஓயர்சபல் ஆகியோரின் கோல்கள் ஸ்பெயினை வெற்றியடையச் செய்துள்ளது. கோபன்ஹேகனில் நடந்த இந்தப் போட்டியில் 90 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டிருந்தன.

ஆட்டத்தின் முதல் கோல் ஸ்பெயின் அணியின் ஒரு வினோதமான சொந்த கோலாகும். ஆனால் ஸ்பெயின் அதிலிருந்து மீண்டு காலிறுதிக்கு முன்னேறப் போராடியது. பின்னர் கூடுதல் நேரமாக மேலும் 30 நிமிடங்கள் இரண்டு அணிகளும் விளையாடின. அதில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

முதல் கோலான சொந்த கோல் ஸ்பெயினின் கோல்கீப்பர் யுனை சைமன், பெட்ரியிடமிருந்து ஒரு பேக் பாஸை பெறுவதில் ஏற்பட்ட தவறால் 20ஆவது நிமிடத்தில் நிகழ்ந்தது. பப்லோ சரபியா (38ஆவது நிமிடம்), சீசர் அஸ்பிலிகுயெட்டா (57ஆவது நிமிடம்) மற்றும் ஃபெரான் டோரஸ் (76ஆவது நிமிடம்) மூலம் ஸ்பெயின் சிறப்பாக பதிலளித்தது.

ஆனால் குரோஷியா கடைசி ஐந்து நிமிடங்களில் மிஸ்லாவ் ஆர்சிக் (85ஆவது நிமிடம்) மற்றும் மரியோ பசாலிக் (92ஆவது நிமிடம்) கோலடித்தனர். அதனால் ஆட்டம் நீட்டிக்கப்பட்டது.

பிரான்ஸ் vs சுவிட்சர்லாந்து
(சுவிட்சர்லாந்தில் பெனால்டி ஷூட் வெற்றி)

euro 2021
euro 2021
சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் யான் சோமர், பிரான்ஸ் ஸ்ட்ரைக்கர் கைலியன் ம்பாப்பேவின் பெனால்டி ஷூட் கோலைத் தடுத்து, 5-4 என்ற கோல் கணக்கில் தனது அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். ஆட்டம் 90 நிமிடத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. 

அதன் பின்னர் 30 நிமிடம் கூடுதல் நேரம் ஆட்டம் நடந்தது. அதிலும் ஆட்டம் சமநிலையில் இருந்தது. அதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குப் போனது. அதில் சுவிட்சர்லாந்து வெர்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

15ஆவது நிமிடத்தில் ஹாரிஸ் செஃபெரோவிக், ஸ்டீவன் ஜூபர் குறுக்காக அடித்த ஒரு பந்தை தலையால் முட்டி கோல் அடித்தால், சுவிஸ் ஒரு அதிர்ச்சி முன்னிலை பெற்றது. ஆனால் அவர்களின் அடுத்த கோல் முயற்சியை ஹ்யூகோ லோரிஸ் காப்பாற்றினார்.

கரீம் பென்செமா 103 வினாடிகளுக்குள் இரண்டாவது கோலை அடித்தார். பால் போக்பா 15 நிமிடங்களுடன் பிரான்ஸை 3-1 என்ற கணக்கில் உயர்த்த ஒரு அற்புதமான கோல் போட்டார். ஆனால் செஃபெரோவிக் 81ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தார்.

மரியோ கவ்ரனோவிக் 90ஆவது நிமிடத்தில் கடைசி நிமிடத்தில் சமநிலையை அளித்த கோலை அடித்தார். பிரான்ஸ் அணியின் மாற்று வீரர் கிங்ஸ்லி கோமன் ஆட்டத்தை 3-3 என்ற கணக்கில் முடித்து கூடுதல் நேரத்திற்கு ஆட்டத்தைக் கொண்டு சென்றார்.

இரு தரப்பினரும் கூடுதல் நேரமான அடுத்த 30 நிமிடங்களில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், போட்டி பெனல்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது. அதில் 5-4 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வென்றது. இது இந்தப் போட்டியின் மிகப் பெரிய அப்செட்.

சுவிட்சர்லாந்து நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்து, பிரான்ஸை யூரோ 2020 இல் இருந்து வெளியேற்றியது. உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான பிரான்சு இதனால் போட்டியை விட்டு வெளியேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe