October 22, 2021, 12:08 pm
More

  ARTICLE - SECTIONS

  யூரோ 2021: இங்கிலாந்தும் உக்ரைனும் பெற்ற வெற்றிகள்!

  யூரோ-2020 காலிறுதிப் போட்டிகள் 16 சுற்றின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இப்போட்டிகள் வெள்ளிக்கிழமை 2 மற்றும் ஜூலை 3

  euro cup 2021
  euro cup 2021

  யூரோ 2020 காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள்
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  நான்காம் நாள் – காலிறுதியில் பங்கு பெறும் அணிகள்

  நேற்று, யூரோ 2020இல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
  முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி இடையே லண்டனின் வெம்ப்லி ஸ்டேடியத்தில் 29 ஜூன் 2021 அன்று இந்திய நேரப்படி இரவு 2130 மணிக்கு நடைபெற்றது.
  இரண்டாவது போட்டி 30 ஜூன், 2021 அன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள ஹாம்ப்டன் பார்க் மைதானத்தில் ஸ்வீடன் மற்றும் உக்ரைன் இடையே இந்திய நேரப்படி இரவு 0030 மணிக்கு நடைபெற்றது.

  இங்கிலாந்து – ஜெர்மனி (இங்கிலாந்து வெற்றி, 2-0)

  செவ்வாயன்று வெம்ப்லி ஸ்டேடியத்தில் ஜெர்மனியை எதிர்த்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பின்னர் இங்கிலாந்து யூரோ 2020 காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து இதுவரை இரண்டு கோல்களை மட்டுமே அடித்தது அவற்றுள் ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு கோல் அடித்துள்ளார்.

  இன்று அவர் தனது இரண்டாவது பாதியில் அடித்த கோலுடன் ஒரு ஹீரோவானார். அவரது வெற்றிக்கான கோல் 75ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. சில நொடிகளுக்குப் பிறகு ஜெர்மனி ஆட்டத்தை வெல்வதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற்றது.

  இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி இரண்டும் நல்ல வலிமையான அணிகள். இரண்டு அணிகளும் முதல் பாதியை சம சக்தியுடன் விளையாடியுள்ளன. இருப்பினும், முதல் பாதியில் இங்கிலாந்து முன்னிலை வகித்தது. தாமஸ் முல்லரின் ஒரு மோசமான பாஸ்-ஐ ஸ்டெர்லிங் தடுத்து எடுத்து இலக்கை நோக்கி முன்னேறிநார். முல்லர் அவரைத் துரத்திக் கொண்டிருந்தபோது, பெட்டியின் இடது பக்கத்தில் இருந்த ஹாரி கேனுக்கு பந்து போனது. அவரது பந்தினை மேட்ஸ் ஹம்மல்ஸ் தடுத்து திருப்பி அனுப்பினார்.

  போட்டி முடிவடையும் தருணத்தில் மாற்று வீரர் ஜாக் கிரேலிஷ் ஆட்ட்த்தின் பொக்கை மாற்றினார். அவர் பெட்டியின் இடது பக்கத்தில் இருந்த லூக் ஷாவுக்கு பந்தைத் தட்டிவிட்டார். அவரது குறைந்த உயரத்தில் பறந்து வந்த பந்து கோல்கீப்பருக்கு எதிரில் இருந்த ஸ்டெர்லிங்கிற்குச் சென்றது. அவர் முதல் கோலை அடித்தார்.

  euro 2021
  euro 2021

  ஸ்வீடன் – உக்ரைன் (உக்ரைன் வெற்றி, 2-1)

  குழு நிலை நிலை ஆட்டங்களில் சுவீடன் சிறப்பாக விளையாடியது. எல்லாப் போட்டிகளிலும் வென்று, முதலிடத்தைப் பிடித்தது. ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை எதிர்த்து வெற்றிகளைப் பெற்றது. அந்த அணியின் அலெக்சாண்டர் இசக் இதுவரை போட்டிகளில் தனித்து நிற்கும் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார், மேலும் தங்க பூட் பந்தயத்தில் போட்டியாளராக இருக்கிறார்.

  எமில் ஃபோர்ஸ்பெர்க்குடன் இணைந்து ஆடி அவர் ஏற்கனவே மூன்று முறை கோல் அடித்துள்ளார். உக்ரைன் நாக் அவுட் கட்டங்களை அடைந்ததே ஒரு அதிர்ஷ்ட வாய்ப்புதான். அவர்களின் மூன்று குழு ஆட்டங்களில் இரண்டை அந்த அணி இழந்தது. இருப்பினும், தோல்வியிலும் அவர்கள் தரமான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

  வடக்கு மாசிடோனியாவுடன் அவர்கள் பெற்ற வெற்றி மட்டுமே அவர்கள் குரூப் ஆட்டங்களில் பெற்ற வெற்றியாகும். உக்ரைனின் ஜின்ஷென்கோ 27ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஸ்வீடனின் ஃபோர்பெர்க் 43ஆவது நிமிடத்தில் போட்டியின் தனது நான்காவது கோலுடன் ஸ்கோரைச் சமன் செய்தார்.

  உக்ரைனைச் சேர்ந்த டோவ்பிக் 120ஆவது நிமிட வெற்றிக் கோலை அடித்து, உக்ரைனை காலிறுதிக்கு அனுப்பினார். காலிறுதியில் உக்ரைன் இங்கிலாந்துடன் விளையாடும். ஆட்டத்தின் 98ஆவது நிமிடத்தில், ஸ்வீடனின் டேனியல்சன் பெசெடினின் காலில் முழங்கால் பகுதில் உதைத்தார், அதற்காக அவருக்கு சிவப்பு அட்டைவழங்கப்பட்டு அவர் வெளியேற்றப் பட்டார். பின்னர் பத்து வீரர்களுடன் சுவீடன் ஆட்டத்தை விளையாடியது.

  கால் இறுதிப் போட்டிகள்

  யூரோ-2020 காலிறுதிப் போட்டிகள் 16 சுற்றின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இப்போட்டிகள் வெள்ளிக்கிழமை 2 மற்றும் ஜூலை 3 சனிக்கிழமைகளில் விளையாடப்படும்.

  கால் இறுதிப் போட்டிகள் :
  ஜூலை 2 வெள்ளிக்கிழமை
  சுவிட்சர்லாந்து Vs ஸ்பெயின் (2130 IST, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்)
  பெல்ஜியம் Vs இத்தாலி (0030 IST, மியூனிக்)

  ஜூலை 3 சனி
  செக் குடியரசு Vs டென்மார்க் (2130 IST, பாகு)
  உக்ரைன் vs இங்கிலாந்து (0030 IST, ரோம்)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,576FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-