Home அடடே... அப்படியா? Ind Vs Eng Test: மூன்றாவது டெஸ்டில் முதல் நாள் எப்படி இருந்தது?!

Ind Vs Eng Test: மூன்றாவது டெஸ்டில் முதல் நாள் எப்படி இருந்தது?!

eng vs ind test

இந்தியா Vs இங்கிலாந்து
மூன்றாவது டெஸ்ட், முதல் நாள் ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

‘இரண்டாவது டெஸ்டில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய அணியா இது?’ என கிரிக்கட் ஆர்வலர்கள் இந்திய அணியைப் பற்றி நேற்று யோசித்திருப்பார்கள். அத்தனை மோசமான ஆட்டத்தை இந்திய அணி நேற்று (25 ஆகஸ்டு 2021) வெளிப்படுத்தியது.

‘பூவா தலையா’ வில் வெற்றி பெற்று கோலி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அணியின் பேட்ஸ்மென்கள் மீது அவருக்கு அத்தனை நம்பிக்கை. ஆனால் நம்பிக்கை பொய்யானது. புஜாரா, கோலி, ரஹானே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வீரர்களைப் போல ஆடவில்லை. ராகுல் பாவம்; The las of cricketing averages அவரை பழிதீர்த்துவிட்டது.

பந்த் இந்த அணியில் விளையாடுகிறார் என்பதே அவருடைய அதிர்ஷ்டம். ஒரு டெஸ்ட் மேட்சில் இக்கட்டான நிலையில் விளையாடுகிறோம் என்பதே அவருக்கு நினைவில்லை. மொத்தத்தில் 39.4 ஓவரில் 78 ரன்கள் எடுத்து அனைவரும் அவுட் ஆயினர்.

அடுத்த 40 ஓவர்களில் இங்கிலாந்து விக்கட் இழப்பின்றி 120 ரன் எடுத்தது. மதியத்திற்குமேல் ஆட்ட களம் பேஸ்மென்களுக்கு சாதகம் ஆகிவிட்டதோ என நீங்கள் நினைக்கலாம். அப்படியில்லை.

இந்திய பவுலர்கள் சரியாக பந்து வீசவில்லை. இங்கிலாந்து வீரர் ஹசீப் ஹமீது 130 பந்துகள் சந்திக்கிறார்; 60 ரன் எடுக்கிறார்; அதில் 11 நான்கு ரன்கள்; அதாவது 44 ரன்கள்; மீதி 16 ரன்னை அவர் சிங்கிள் அடித்து ஓடினார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 27 பந்துகள் ஸ்கொரிங் ஷாட்டுகள்; பாக்கி 103 பந்துகளை அவர் தடுப்பாட்டம் ஆடியிருக்கிறார். அதாவது இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆஃப் ஸ்டெம்பிற்கு வெளியே அத்தனை பந்து வீசியிருக்கிறார்கள்.

இந்திய அணியின் ஒரு மிக மோசமான ஆட்டம். இன்று என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version