October 17, 2021, 12:32 am
More

  ARTICLE - SECTIONS

  இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து!

  பந்த், ரஹானே மற்றும் ஜடேஜாவை கைவிடுவேன்; பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் மற்றும் அஸ்வினை

  eng vs ind test
  eng vs ind test

  -முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

  இந்தியா -இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட், நான்காம் நாள் ஆட்டம்
  இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

  இங்கிலாந்து 432 (ரூட் 121, மாலன் 70, ஹமீட் 68, பர்ன்ஸ் 61, ஷமி 4-95) இந்தியா 78 (ஷர்மா 19, ஆண்டர்சன் 3-6, ஓவர்டன் 3-14) மற்றும் 278 (புஜாரா 91, சர்மா 59, கோஹ்லி 55, ராபின்சன்) 5-65) இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் நான்காம் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் நம்பிக்கையுடன் தொடங்கியது.

  ஒருபுறம், இந்தத் தொடரில் இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த இரண்டு மட்டையாளர்கள்; ஆனால் அவர்கள் இத்தொடரில் நன்றாக விளையாடவில்லை; அதே சமயம் அவர்கள் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தங்களின் ஆட்டத்திறனை மீண்டும் கண்டுபிடித்தனர்.

  அவர்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லா நீல வானம், டெஸ்டில் வெற்றிபெற நிறைய நேரம் இருந்தது. மறுபுறம், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அவருடைய தோழர்கள். ஒரு பிரகாசமான புதிய சிவப்பு நிற டியூக் கிரிக்கெட் பந்து, ஹெடிங்லி மைதானத்தின் சிறப்பான பிட்ச்.

  இது ஒரு பெரிய மோதலாக கருதப்பட்டது, ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு கெட்ட கனவாக மாறியது. அவர்கள் 63 ரன்களுக்கு கடைசி எட்டு விக்கெட்டுகளை இழந்தனர்; அவர்களின் கடைசி ஏழு ரன்கள் 41 ரன்னுக்கு விழுந்தன.

  மேலும் அவர்கள் மதிய உணவு வரை நீடிக்கவில்லை, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் தோற்றனர். இங்கிலாந்து வெற்றியைப் பெற அதிக நேரம் எடுக்கவில்லை. நாளின் நான்காவது ஓவரில், அதுவரை புத்திசாலித்தனமாக அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் பந்துகளை விட்டுவிட்ட புஜாரா – ராபின்சன் வீசிய இன்ஸ்விங்கர் பந்துக்கு தனது தோள்பட்டைகளைத் தூக்கி, பந்தை அடிக்காமல் விட்டார்.

  அது அவரது கால் மட்டையில் பட்டது. LBW அவுட் கேட்கப்பட்டது. அம்பெயர் தரவில்லை. அந்த முடிவைப் பெற இங்கிலாந்து ஒரு மதிப்பாய்வைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. புஜாரா ஜனவரி 2019 க்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் சதத்திற்கு ஒன்பது ரன்கள் குறைவாக இந்த நாளைத் தொடங்கினார், ஆனால் அவரது ஸ்கோரை ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

  கோஹ்லி தனக்கு வந்த விக்கெட்டுக்கு வெளியே வீசப்பட்ட ஒரு பந்தை அநாவசியமாகத் தொட்டதால் 55 ரன்களில் அவுட் ஆனார். பிறகு, விக்கெட்டுகள் திடீர் வெள்ளம் போல் வந்தன. அஜின்கியா ரஹானே வெளியே போகும் பந்தை தொட்டு அவுட்டானார்.

  ரிஷப் பந்த் சில தடாலடி ஷாட்டுகளை அடிக்க முற்பட்டார். ஆனால் ஒரு பந்தை தடுத்தாடும்போது அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். அடுத்த டெஸ்ட் ஓவல் மைதானத்தில். நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்தியாவுக்கு நான்கு நாட்கள் விடுமுறை உள்ளது.

  லார்ட்ஸின் உச்சத்தைத் தொடர்ந்து, இப்போது இரண்டு சரிவுகளைக் கொண்ட ஹெடிங்லியில் நடந்த இந்த டெஸ்ட் முடிவை மறந்து விட்டு “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே” என்ற தாராக மந்திரத்துடன் இந்திய அணி விளையாடவேண்டும்.

  ரவீந்தர் ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, மேலும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடுவது சந்தேகம். எனவே அஸ்வின் அடுத்த இரண்டு பொட்டிகளிலும் விளையாட வாய்ப்புள்ளது.

  நான் தேர்வாளராக இருந்தால், பந்த், ரஹானே மற்றும் ஜடேஜாவை கைவிடுவேன்; பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் மற்றும் அஸ்வினை அணியில் சேப்பேன். கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-