மணப்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவர் என்.பாலமுருகன் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

கோவையில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் இந்திய சார்பில் கலந்துக்கொண்டு 4 தங்க பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய மணப்பாறையை சேர்ந்த என்.பாலமுருகனுக்கு பேருந்துநிலையம் பகுதியில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுகவினர் தாரைத்தப்பட்டைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜீவ்நகரை சேர்ந்தவர் பாலமுருகன். வலு தூக்கும் வீரரான இவர் விளையாட்டு வீரருக்கான ஒதுக்கீட்டின் கீழ் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதலாம் ஆண்டு தாவரவியல் பயின்று வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவில் பங்கேற்று பதங்களை வென்றவர் பாலமுருகன். தற்போது, கோவையில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனம் இணைந்து கடந்த 17-ஆம் முதல் 21- ஆம் தேதி வரையில் நடந்திய ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் இந்திய சார்பில் பாலமுருகன் கலந்துக்கொண்டார். போட்டியில் இந்தியா, சீனா, ஓமன், ஜப்பன் உள்ளிட்ட 13 நாடுகளிலிருந்து 197 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் மூத்தோர் ஆகிய 3 பிரிவுகளில் பென்ச் பிரஸ், ஸ்கோடு, டெத் கிளிக் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் 120+ வகையின் கீழ் கலந்துக்கொண்ட பாலமுருகன் 4 வகை போட்டிகளிலும் வென்று 4 தங்க பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையில் 655 கிலோ வலுவை தூக்கி பாலமுருகன் சேம்பியன்சிப்பை வென்றுள்ளார்.
பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய பாலமுருகனுக்கு மணப்பாறை பேருந்து நிலையத்தில், பாட்டாசு வெடித்து தாய் மற்றும் சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுகவினர் தாரைத்தப்பட்டைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மணப்பாறை மண்ணிற்கு தொடர்ந்து பெருமை சேர்ப்பேன் எனக்கூறிய பாலமுருகன் தனது வெற்றிக்கு உதவி செய்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், தமிழ்நாடு வலுதூக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார்.