இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச் – மூன்றாம் நாள் – 03 ஜூலை 2022
– K.V. பாலசுப்பிரமணியன்
மூன்றாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 84/5 என்ற ரன் கணக்கோடு தொடங்கியது. பெயர்ஸ்டோ 12 ரன்னுடனும் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு முன்னர் ஒரு முறையும் அதன் பின்னர் ஒரு முறையும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ மிகச் சிறப்பாக ஆடினார். 140 பந்துகளில் 106 ரன் எடுத்து அணியின் ஸ்கொரை ஆட்ட முடிவில் 284 ரன்னுக்கு உயர்த்தினார்.
61.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 284 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. சிராஜ் 4 விக்கட்டுகளும், பும்ரா 3 விக்கட்டுகளும், ஷமி 2 விக்கட்டுகளும் தாகூர் 1 விக்கட்டும் எடுத்தனர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடத் தொடங்கிய இந்திய அணி முதல் ஓவரில் ஷுப்மன் கில் விக்கட்டை இழந்தது. புஜாரா சிறப்பாக விளையாடினார். இதைப்போலவே நான்காம் நாளிலும் புஜாரா விளையாடினால் அவர் நூறு அடிப்பதும், இந்தியா வெற்றிபெறுவதும் நிச்சயம்.
ரிஷப் பந்த் இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் இருப்பதால், இந்தியாவின் வெற்றிக்கு நிறைய வாய்ப்பிருப்பதாகத் தான் தெரிகிறது.