- Ads -
Home விளையாட்டு IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் ஆட்டம் – அகமதாபாத் – 12 பிப்ரவரி 2025

இங்கிலாந்து அணி படுதோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (356, ஷுப்மன் கில் 112, ஷ்ரேயாஸ் ஐயர் 78, விராட் கோலி 52, கே.எல். ராகுல் 40, அதில் ரஷீத் 4/64, மார்க் வுட் 2/45, ஓவர்டன், மகமூத், அட்கின்சன் தலா ஒரு விக்கட்) இங்கிலாந்து அணியை (34.2 ஓவர்களில் 214, அட்கின்சன் 38, டாம் பேண்டன் 38, பென் டக்கட் 34,  ஜோ ரூட் 24, பில் சால்ட் 23, ஜாஸ் பட்லர் 34, ஹாரி ப்ரூக் 31, அர்ஷதீப் சிங் 2/33, ஹர்ஷித் ராணா 2/31, அக்சர் படேல் 2/22, ஹார்திக் பாண்ட்யா 2/38, வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கட்) 142 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக: அண்ணாமலை காட்டம்!

          பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீசத்தீர்மானித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் முகமது ஷமி, ஜதேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்குப் பதிலாக அர்ஷதீப் சிங், வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் விளையாடினர்.

          ஆட்டத்தின் தொடக்கத்திலேயெ இந்திய அணியின் தொடக்க வீரர், அணித்தலைவர் ரோஹித் ஷர்மா ஒரு ரன் எடுத்து இரண்டாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் (102 பந்துகளில் 112 ரன், 14 ஃபோர் 3 சிக்சர்) மற்றும் அடுத்து களம் இறங்கிய விராட் கோலி (55 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். அதன் பின்னர் வந்த அனைத்து இந்திய வீரர்களும் ரன்ரேட் குறையாமல் ஆடினர்.

ஷ்ரேயாஸ் ஐயர் (64 பந்துகளில் 78 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) கே.எல். ராகுல் (29 பந்துகளில் 40 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஹார்திக் பாண்ட்யா (17 ரன்) அக்சர் படேல் (13 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (14 ரன்), ஹர்ஷித் ராணா 913 ரன்) என அனைவரும் சிறப்பாக ஆடினர். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 356 ரன் எடுத்தது.

ALSO READ:  IPL 2025: 18 ஆண்டுகளில் பெங்களூரு பெற்ற முதல் வெற்றி

          இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் தொடக்கம் மிகவும் பிரமாதமாக இருந்தது. பவர்ப்ளே ஓவர்களான முதல் 10 ஓவர்களில் அந்த அணி 2 விக்கட் இழப்பிற்கு 84 ரன் எடுத்திருந்தது. பில் சால்ட் (21 பந்துகளில் 23 ரன்), பென் டக்கட் (22 பந்துகளில் 34 ரன்), டாம் பேண்டன் (41 பந்துகளில் 38 ரன்), ஜோ ரூட் (29 பந்துகளில் 24 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஹாரி ப்ரூக் (19 ரன்), அட்கின்சன் (19 பந்துகளில் 38 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 214 ரன்கள் எடுத்தது. 

இதனால் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

          ஆட்ட நாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தத் தொடர் வெற்றி சாம்பியன் ட்ராபி ஆடப்போகும் இந்திய அணிக்கு ஒரு மகத்தான ஊக்கம் தரும் வெற்றியாக அமைந்துள்ளது. 

ALSO READ:  எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version