முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வங்கதேச அணிகள் மோதின.
கொழும்புவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அணியில் ரோஹித் சர்மா 61 பந்துகளில் 89 ரன்களை சேர்த்தார். சுரேஷ் ரெய்னா 30 பந்துகள் எதிர்கொண்டு 47 ரன்களை எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் சேர்த்தது. இதை அடுத்து வங்கதேசத்துக்கு இலக்காக 177 ரன்களை நிர்ணயித்தது.
பின்னர் களம் இறங்கிய வங்க தேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து, தோல்வியைத் தழுவியது. கடைசி 4 பந்துகளில் 27 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் இருந்தது. இதை அடுத்து வங்கதேச அணி, 17ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.