இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி 47 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
215 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 16-ம் தேதி கார்டிப் மைதானத்தில் நடைபெற உள்ளது.