இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய லெவன் அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர் இடம் பெற வேண்டும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனை எதிரணியை பொறுத்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தனது காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு நிறைவுடன் காணப்படுகிறது. எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் உள்ளனர். ஸ்விங் செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார், உயரமான பவுலரான இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசக்கூடிய பும்ரா, மிகவும் வேகமாக பந்து வீசக்கூடிய உமேஷ்யாதவ் என்று நல்ல கலவையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அமைந்துள்ளனர்” என்றார்.