விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசை வெளியிடு

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெடரர், நடால், சிலிச் முதல் 3 நிலைகளை பிடித்துள்ளனர். ஜோகோவிச்சுக்கு 12வது நிலை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் ஒற்றையரில் ஹாலெப், வோஸ்னியாக்கி, முகுருசா முதல் 3 நிலைகளை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 25வது ரேங்க் வீராங்கனையாக களமிறங்க உள்ளார்.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை லண்டனில் நடக்க உள்ளது.