மாற்றுத்திறனாளிகளுக்கான மெரீனா ஓபன் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடக்கும் இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பாலசந்தர், மாரியப்பன், கர்நாடகாவின் சேகர் வீராசாமி உட்பட 37 வீரர்களும், பானு ஜான்நாடார், சுதா உள்ளிட்ட 8 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இறுதிப் போட்டிகள் ஆக. 4ம் தேதி நடைபெற உள்ளன. மொத்தம் ரூ2.32 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
சென்னையில் மெரீனா ஓபன் வீல்சேர் டென்னிஸ்
Popular Categories