கிரிக்கெட்டில் குறைந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 6,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். 2012-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜோ ரூட் 5 ஆண்டுகள் 231 நாட்களில் 6,000 ரன்களை கடந்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழந்து 285 ரன்களுடன் இருந்தது. இதில் ஜோ ரூட் 156 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிரிக்கெட்டில் குறைந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 6,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். அப்போது 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மேற்கொண்டு 2 ரன் சேர்த்த நிலையில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.