இந்தியா – இங்கிலாந்து அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் விளையாடிய டேவிட் மாலன் நீக்கப்பட்டு, புதுமுக வீரர் ஓல்லி போப்புக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.