October 17, 2021, 8:43 pm
More

    ARTICLE - SECTIONS

    காயம் காரணமாக ஷாகிப் அல் ஹசன் ஆசிய போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது

    10 Aug09 Shakib al hassan - 1வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டரும் ஆன ஷாகிப் அல் ஹசன் கடந்த ஜனவரி மாதம் சொந்த மண்ணில் இலங்கையை எதிர்த்து ஒருநாள் தொடரில் விளையாடினார். அப்போது இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகினார். அதன்பின் ஆஸ்திரேலியா சென்று சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தினார்கள்.

    ஆனால் ஷாகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. சிகிச்சைக்குப்பின் இலங்கையில் நடைபெற்ற நிதாஹா் டிராபியில் விளையாடினால். கடந்த சில வாரங்களாக வங்காள தேசம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.

    கடைசியாக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது விரலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஐக்கிய அரவு எமிரேட்சில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பையில் பங்கேற்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,561FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-