வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்ததன் மூலம் சச்சின் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்தார். இது கோலிக்கு 60-வது சதமாகும். இதில் டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடங்கும். இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.
இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் கோலி முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம் 426 இன்னிங்சில் 60 சதமடித்து முதலிடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.