2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி போட்டியிடுவார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜார்க்கண்டில் டோனியை போட்டியிட வைக்க பாஜக முயற்சிகள் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தனியார் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தியில், டோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி கேப்டனாக உள்ளார்.
அவருக்கு தென் இந்தியாவில் செல்வாக்கு உள்ளது. டோனி மற்றும் காம்பிர் இருவரும் தங்களது மாநிலம் மட்டுமன்றி நாடு முழுவதும் நன்மதிப்பை பெற்று உள்ளனர். எனவே இவர்கள் விரைவில் பா.ஜ.,வில் இணையலாம் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது மீனாட்சி லேக்கி உள்ளார். மீனாட்சி லேக்கிக்கு பாஜக கட்சி சீட் கொடுக்க விரும்பமில்லை என்றும் லேக்கிக்கு பதில் காம்பிர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.