பார்முலா 1 கார் பந்தயத்தில், இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மெக்சிகோ கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் 4வது இடம் பிடித்த ஹாமில்டன் 12 புள்ளிகள் பெற்றதையடுத்து, 2018ம் ஆண்டுக்கான பார்முலா 1 சீசனில் அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியானது. இந்த போட்டியில் ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari