பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, அபு தாபி ஷேக் சையது ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்கு தொடங்குகிறது. சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயக்கம் காட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் தனது போட்டிகளை விளையாடி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்ததுடன் தொடர்ச்சியாக 10 டி20 தொடர்களை வென்று அசத்தியுள்ளது. டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி இருக்கும் பாகிஸ்தான் அணி, அடுத்து நியூசிலாந்து அணியின் சவாலை சந்திக்கிறது. இரு அணிகளும் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.