2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனை டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் மிட்செல் ஸ்டார்க்கிற்குத் தெரிவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம்.
இது குறித்து அவர் கூறுகையில், கொல்கத்தா அணி நிர்வாகிகளிடமிருந்து எனக்கு டெக்ஸ்ட் மெசேஜ் இருநாட்களுக்கு முன்பாக வந்தது. அதில் என்னை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நான் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் பரவாயில்லை, போனால் போகிறது, இதுவே எனக்கு இங்கிலாந்தில் 6 மாத கால பெரிய அளவிலான கிரிக்கெட்டுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ள பெரிய வாய்ப்பாக அமைந்ததாகக் கருதுகிறேன் என கூறியுள்ளார்.