‘இடது’களை போட்டுத் தள்ளினதுல நம்ம தமிழன்தான் முதலிடம்!

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான அளவு இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் நம் தமிழக வீரர் அஷ்வினே டாப் பாக உள்ளார்.

தற்போது இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது நாளான இன்று தனது டாப் ஆர்டரை வேகமாக இழந்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராங் டாப் ஆர்டரின்’ 3 இடது கை பேட்ஸ்மேன்களையும் அஷ்வின் ஆட்டம் இழக்கச் செய்தார்.

டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களில், அதிகமான இடது கை பேட்ஸ்மென்களை வீழ்த்தியதில் அஷ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 339 விக்கெட்டுகளில் 179 பேர் இடது கை பேட்ஸ்மென்களே! இதன் சராசரி 52.80. அஸ்வினுக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் சுவான் (255ல் 122) உள்ளார்.