மும்பைக்கு எதிராக டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி

ஐபிஎல் சீஸன் 8ல் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு, டெல்லி அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.