இதுவரை இந்தியா பாகிஸ்தான் மோதிய 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

பேட்டில் பந்துபடவில்லை – அம்பயர் அவுட் கொடுக்கும் முன் வெளியேறினார் கோலி!

உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது .

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.

இந்தப் போட்டியில் அமீர் வீசிய 48வது ஓவரின் நான்காவது பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அமீர் அந்த பந்தனை பவுண்சராக அவரது தலைக்கு மேலே வீசினார்.

அதனை விராட் அடிக்க முயன்றார். பந்து அவரை கடந்து கீப்பர் சர்பராஸ் அகமதுவிடம் சென்றது.

அமீர் மற்றும் சர்பராஸ் அவுட் கேட்டு உரக்க கத்தினர். உடனே விராட் கோலி பெவிலியன் திரும்பினார்.

ஆனால், அப்பொழுது அம்பயர் அவுட் கூட கொடுக்கவில்லை. விராட் நகர ஆரம்பித்த பின்னர்தான் அம்பயர் அவுட் என தலையை அசைத்தார்.

பின்னர், அல்ட்ராவில் விராட் கோலியின் கேட்ச் சரிபார்க்கப்பட்டது. ஆனால், பேட்டில் படவில்லை என்பது அல்ட்ராவில் தெளிவாக தெரிந்தது. ஆக, விராட் அவுட் இல்லை.

இந்திய அணிக்கு ரிவிவ்யூ கேட்கும் வாய்ப்பு கூட இருந்தது. ஆனால், உடனே நடையை கட்டிவிட்டார்.

தொடர்ந்து 7 முறை… சாதனை

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை என்ற சாதனை தொடர்கிறது.

இந்நிலையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் மோதிய 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் 133 பந்துகளில் 140 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...