Tag: காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் என வரைவுத் திட்டத்தில் பெயரைக் குறிப்பிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
இதன்படி, காவிரி நதிநீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். மேலும், காவிரியில் புதிதாக அணைகள் கட்ட இயலாது. மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகமோ தமிழகமோ அணைகள், தடுப்பணைகள் கட்டக் கூடாது. இதற்கான அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கே இருக்கும்.
33வது வழக்காக காவிரி வழக்கு: உச்ச நீதிமன்ற இன்றைய பட்டியலில்!
புது தில்லி: காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் 33-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இன்று காலை உச்சநீதிமன்ற...
மோடி, சித்தராமையா உருவப் படங்களை எரித்து போராட்டம்: தஞ்சை விமானப் படை தள முற்றுகை முயற்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று காலை தஞ்சை விவசாயிகள் மோடி, சீத்தாராமையா படங்களை எரித்து போராட்டம் மேற்கொண்டனர். மேலும் தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி தொடர்பில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; பதிலில்லை: முதல்வர்
சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அய்யாக்கண்ணு மெரீனாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
முன்னதாக, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதியின் உத்தாவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. தமிழக அரசின் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்தது.
காவிரி: தாமதப்படுத்தும் மத்திய அரசின் மீது கமல் கடுங்கோபம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.
காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம்
மத்திய அரசின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
காவிரி விவகாரத்தில் மேலும் 2 வாரம் கால அவகாசம்: கோரியது மத்திய அரசு
மே 3ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர். இந்நிலையில் மத்திய அரசின் கால அவகாச நீட்டிப்பு கோரிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல்., போல் காவிரிக்காக திரைப்பட வெளியீடுகளும் ஒத்தி வைக்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ஐபிஎல் போட்டிகள்போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே
இதயத்தில் உள்ளது காவிரி! மேலாண்மை வாரியம் விரைவில் அமையும்! : ஆளுநர் கொடுத்த நம்பிக்கை!
“காவிரி விவகாரம் என் இதயத்தில் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நான் மேலிடத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றேன். எப்போதெல்லாம் நான் தில்லி செல்கிறேனோ அப்போதெல்லாம் நான் காவிரி விவகாரம் குறித்து பேசுகிறேன்.
காவிரியில் துரோகம் இழைக்கும் காங்கிரஸை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும்? : ஹெச்.ராஜா நம்பிக்கை!
சென்னை: காவிரியில் துரோகம் இழைக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் கட்சியை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.