February 10, 2025, 6:05 PM
30.2 C
Chennai

Tag: நிர்மலா தேவி

நிர்மலா தேவி விவகாரம்: போலீஸ் கொடுத்த செய்தி பொய்யாம்!

முன்னதாக, பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும்தான், மாணவிகளிடம் தாம் பேசியதற்கு காரணமாக அமைந்த இருவர் என்று நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகின.

பேராசிரியை நிர்மலா தேவி மீது அடுத்த குற்றப் பத்திரிகை!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்லத் தூண்டிய விவகாரத்தில் அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நிர்மலா தேவி இன்று சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்

பேராசிரியை நிர்மலா தேவியை குரல் மாதிரி பரிசோதனை செய்ய இன்று முதல் மூன்று நாள்கள் சென்னை அழைத்துச்செல்ல சி.பி.சி.ஐ.டி-க்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் மதுரைக்...

நிர்மலா தேவி ஜாமீன் மனு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி

இந்நிலையில் நிர்மலா தேவி சார்பில்  ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட தடை

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமியிடம் சந்தானம் குழு விசாரணை

நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இவர்கள் இருவரிடமும் விசாரணை முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப் படும் என்று கூறப் படுகிறது.

நிர்மலா தேவி விவகாரத்தில் வெளியான அசிங்க வீடியோ: அதிர்ச்சியில் போலீஸார்

கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வழி நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியிடம் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகார விசாரணை: சந்தானம் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

விசாரணை அறிக்கையை ஏப்.30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி கொடுத்துள்ளார். 

நிர்மலா தேவி விவகாரம்: யாரையோ காப்பாற்ற என் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என முருகன் மனைவி புலம்பல்

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிர்மலாதேவி என் கணவரை சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கோரினார். ஆனால் என் கணவர் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவேண்டாம், கல்லூரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டார். இது தவிர என் கணவருக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை...

நிர்மலா தேவி வழக்கு விசாரணை 30 ஆம் தேதிக்குள் முடியாது: சந்தானம்

அவர் அருப்புக்கோட்டை கல்லூரி, பல்கலைக்கழக துணை வேந்தர், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்து, சிறையில் உள்ள நிர்மலா தேவியிடமும் விசரணை நடத்தினார்.

லஞ்ச ஊழல் புழல் ஜெயிலர் நிர்மலா தேவி இருக்கும் சிறைக்கு மாற்றம்!

இந்நிலையில் ஜெயராமன் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஜெயிலராக இருந்த உதயகுமார் புழலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு கிடுக்கிப் பிடி விசாரணை! வீடியோ பதிவு!

முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு கைதான பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு இன்று விசாரணை நடத்திவருகிறது.