Tag: ஸ்கீம்
காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம்
மத்திய அரசின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஸ்கீம் -ஒரு செயல் திட்டம் மட்டுமே! மேலாண்மை வாரியம் அல்ல: மே.3 வரைவு அறிக்கை பெற்ற பின் விளக்குகிறோம்: உச்ச நீதிமன்றம்!
கர்நாடகமும், கேரளமும் அரசியல் லாபம் கருதி, கர்நாடகத் தேர்தல் களனை கருத்தில் கொண்டு, ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி, மத்திய அரசை நெருக்கின. எனவேதான் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தையே நாடியது. இந்நிலையில், மத்திய அரசின் பக்கமே செயல்படுத்தும் கட்டாயச் சூழல் உண்டு என்று குறிப்பிட்டதால், அடுத்து மத்திய அரசின் பக்கமே இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தால் திருப்பிவிடப் பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்கும் வரைவு திட்டம் மூலமே, அடுத்து அதன் நிலை என்பது தெரியவரும்.
3 மாத அவகாசம் கேட்கும் மத்திய அரசு! அவமதிப்பு வழக்கு போட்ட மாநில அரசு!
மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததைத் தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா? தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? - என்று கேள்வி எழுப்பியுள்ளது மத்திய அரசு.