
காஞ்சிபுரம் அருகே உள்ளது திருப்போரூர் மாவட்டம். இந்த பகுதியில் அருகே அமைந்துள்ளது கங்கையம்மன் கோயில்.
இந்த கோவிலின் குளத்தை சீரமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் மர்ம பொருள் ஒன்றை கண்டுபிடித்த அவர்கள் அதை உடைக்க முடிவு செய்து. கற்களை வைத்து உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
இந்த முயற்சியின் போது அந்த பொருள் அதிபயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கூவத்தூர் அடுத்துள்ள குண்டு மணிசேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சூர்யா பலியானார்.
மர்ம பொருள் வெடித்து சிதறியதில் காயமடைந்த ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மர்ம பொருளின் பாகங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.