
பொன்னேரியை அடுத்த அரவாக்கத்தைச் சேர்ந்த தம்பதி திரேச்குமார் – கோமதி. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான். கோமதிக்கு 27 வயதாகிறது.
திரேச்குமார், ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் குடும்பத்துடனேயே அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரேச்குமார் கடைக்கு போய் கோழிக்கறி வாங்கி வந்தார். மனைவியிடம் அதை தந்து சமைக்க சொன்னார். கோழிக்கறியை எடுத்து கொண்டு கோமதி சமையல் செய்ய போனார்.
அப்போது, குழந்தையை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள் நான் சமைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கணவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.
குழந்தையையும் கவனித்து கொண்டு எப்படி, சமையலும் செய்வது என்று கோமதி கேட்க, ஆத்திரம் அடைந்த திரேச்குமார். கோமதியை அடித்து தாக்கியதுடன், கீழே கிடந்த ஒயரை எடுத்து கோமதியின் கழுத்தை சுற்றி இறுக்கி.. நெரித்தும் இருக்கிறார்.
கோமதி அங்கேயே துடிதுடித்து கீழே விழுந்து இறந்தார். இதை பார்த்து பயந்து போன திரேச்குமார், கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து விட்டதாக மாமியார் வீட்டுக்கு தகவல் சொன்னார்.
அதிர்ந்து போன கோமதியின் பெற்றோர் மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். திரேச்குமாரும் அழுது கொண்டிருந்தார். மகளின் சடலத்தை அரவாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.
யாருக்குமே திரேச்குமார் மீது சந்தேகம் வரவில்லை. கோமதியின் உறவினர்களில் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால், பேட்டை காவல்நிலையத்தில் புகார் சொல்லவும், கோமதியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த ரிப்போர்ட்டில் தான் கோமதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து திரேச்குமாரை காவல்துறை பிடித்து விசாரிக்கவும்தான், கோபத்திலும் டென்ஷனிலும் கோமதியை கொன்றுவிட்டதாக சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்