
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் இளைஞர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பேரூந்தில் வைத்து வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது 3 ஆவது மகன் சதீஸ்குமார். இவர் டிப்ளமோ படித்து விட்டு பழைய கார், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது காரில் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட துரத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். ஆனாலும் விடாத அந்த கும்பல் அவரைப் பேருந்தில் வைத்தே வெட்டியுள்ளது.
இதைப்பார்த்து பயந்த பயணிகள் ஓடியுள்ளனர். இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அந்த பேருந்திலேயே கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அவர் வழியிலேயே இறந்துள்ளார்.
இது சம்மந்தமாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சதிஷ்குமாருக்கு சொத்து விஷயமாக பங்காளிக் குடும்பத்தோடு பிரச்சனை இருந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் கொலையான சதிஷின் மீதும் இரு கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக கூற்ப்படுகிறது.