- Ads -
Home கிரைம் நியூஸ் 9 மாத கர்ப்பிணி கொலை! கணவன் செய்த சதி அம்பலம்!

9 மாத கர்ப்பிணி கொலை! கணவன் செய்த சதி அம்பலம்!

கள்ளக்காதலியின் உதவியுடன் நிறைமாத கர்ப்பிணியை கணவர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடச்சந்தூர் பகுதியில் வசந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். தினேஷ்குமாரின் வயது 26. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு மில்லில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

3 வருடங்களுக்கு முன்னர் அதே மில்லில் சுஷ்மிதா என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. இருவீட்டாரும் சம்மதித்ததால் திருமணம் நடைபெற்றுள்ளது.ஒன்றரை வருடங்கள் தன்னுடைய மாமனார் வீட்டிலேயே தினேஷ்குமார் தங்கி வந்துள்ளார். டாடா ஏஸ் வாகனத்தை தினேஷ்குமாருக்கு அவருடைய மாமனார் வழங்கியுள்ளார்.

பின்னர் சில நாட்களிலேயே தினேஷ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளதை சுஷ்மிதா கண்டறிந்துள்ளார். மேலும் தினேஷ்குமாரின் கள்ளக்காதலிக்கு 2 குழந்தைகள் உள்ளதையும் கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை சுஷ்மிதா தினேஷ்குமாரைக் கண்டித்துள்ளார். மனைவியின் கண்டிப்பால் தினேஷ்குமார் கள்ளக்காதலியை சந்திக்காமல் இருந்துள்ளார். ஆனால் அடிக்கடி செல்போனில் கள்ளக்காதலியுடன் தினேஷ்குமார் பேசி வந்துள்ளார்.

ALSO READ:  அமைச்சர் பேரச் சொல்லி ரூ.41 லட்சம் சுருட்டிய திமுக., நிர்வாகி மீது புகார்!

அப்போது இருவரும் திட்டம் தீட்டி சுஷ்மிதாவை கொலை செய்வதற்கு முடிவெடுத்தனர்.தோட்டத்திற்கு மனைவியை தனியாக அழைத்து சென்ற தினேஷ்குமார் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக மனைவியின் உடலில் இருந்து சில நகைகளை மட்டும் எடுத்து சென்றுள்ளார்.

சில மணி நேரம் கழித்து உறவினர்களுடன் சேர்ந்து தேடுவது போன்று தினேஷ்குமார் நாடகமாடியுள்ளார். அப்போது அப்போது காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். தினேஷ்குமாருடன் விசாரணையில் ஈடுபட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணையில் ஈடுபட்ட போதே தன் மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் தினேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது வேடசந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது



NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version