32 C
Chennai
02/07/2020 9:33 PM

கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்

Must Read

கொரானாவால் காய்கறி வியாபாரியான மாணவிக்கு குவிந்த உதவிகள்!

மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பியின் கல்லூரி படிப்பு வரை கல்வி செலவை ஏற்பதாக கூறினர்.

மதுரை பல்கலை., உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் ஆய்வு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்கள் விடுதியில் கொரோனா கேர் சென்டர் அமைக்கப் பட்டுள்ளதையும்

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று!

இதை அடுத்து அவர் சென்னை க்ரீன்வேஸ் ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
gayatri twitter கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மீதும் விசிக-வினர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நடன இயக்குநர் நடிகை காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான படுகொலையாகவே பார்க்கப் படுகிறது.

காயத்ரி ரகுராமின் டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு 3 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்கள் இருந்தனர்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஹிந்து கோவில்கள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கையாளர்கள் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர்.

திருமாவளவனுக்கு தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் திருமாவளவனின் பேச்சை பகிர்ந்து இந்த கொச்சை பேச்சுக்கு தாங்கள் கண்டனம் தெரிவிப்பதாக கூறியிருந்தனர்.

gayathrirahugam கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

அவர்களின் வரிசையில் நடிகையும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் தான் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் என்றும் தாம் சார்ந்த மதம் குறித்து கொச்சையாக பேசிய திருமாவளவன் தண்டிக்கப்பட வேண்டிய நபர் என்றும், அதற்காக அவரை எங்கு பார்த்தாலும் சவுக்கடி கேள்விகளை கேளுங்கள் என்றும் பதிவு செய்திருந்தார்!

காயத்ரி ரகுராமின் கடுமையான கண்டனங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் பதில் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தனது கருத்துகளுக்கு ஆதரவு தேடும் விதமாக, அவர் பாமக., நிறுவுனர் ராமதாஸின் உதவியையும் கோரியிருந்தார்.

gayatri கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஹிந்து மதம் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார் காயத்ரி ரகுராம்.

குறிப்பாக ராஜபக்சே குறித்து திருமாவளவன் கூறிய மோசமான சொல்லாடல்களையும், ராஜபக்சேதான் தன்னிடம் வந்து கைகுலுக்கினார் என்று பொய்களை அவிழ்த்து விட்டதையும் கண்டித்த காயத்ரி ரகுராம் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த வீடியோவை பதிவு செய்தார்!

அந்த வீடியோ வைரல் ஆனது. இதை அடுத்து விசிக., ஐ.டி.விங் காயத்ரி ரகுராம் பதிவினை போலியாக தங்களுடையது என்று காப்பி ரைட் க்ளெய்ம் செய்து அந்த வீடியோ நீக்கப்படுவதற்கு கடுமையாக வேலை செய்தனர். மேலும் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பின்பற்றும் காயத்ரி ரகுராம் டிவிட்டர் பக்கத்தினை ரிப்போர்ட் செய்வதற்கு முயற்சி செய்தனர்!

அதனால் தற்போது காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கம் முடங்கியுள்ளது. இதனால் அவருக்கு என்ன நடந்தாலும் அது வெளியில் தெரியாது என்ற நிலை உருவாகி உள்ளது!

Gayathri Raguram கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

மேலும் காயத்ரி ரகுராமின் கருத்துக்களும் அவரது டிவிட்டர் பக்கம் மூலம் வெளியாகும் வாய்ப்பும் தடைசெய்யப்பட்டுள்ளது!இது கருத்து சுதந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்!

டிவிட்டர்வாசிகள், திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்!

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

பின் தொடர்க

17,875FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

More Articles Like This