- Ads -
Home கிரைம் நியூஸ் புதியதாய் மணமான இளம் டாக்டர்! தீடிரென்று எடுத்த விபரீத முடிவு!

புதியதாய் மணமான இளம் டாக்டர்! தீடிரென்று எடுத்த விபரீத முடிவு!

தக்கலையை சேர்ந்தவர் கிருஷ்ணா 28 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர். பளுகல் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு 9 மாசத்துக்கு முன்பு ஆர்யா என்ற டாக்டருடன் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா எம்டி படிக்க அஹமதாபாத் கிளம்பி சென்றுவிட்டார். இதனால் கிருஷ்ணா, தன்னுடைய அப்பா, அம்மாவுடன்தான் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாகவே இவருக்கு மன உளைச்சல் இருந்திருக்கிறது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டார்..

பிறகு செல்போனில் மனைவியை கூப்பிட்டு ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்தார்.. கடைசியாக “நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு தன் ரூமுக்குள் போனார்..

ஆனால் ராத்திரி 8 மணி ஆகியும் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.. இதனால் பயந்து போன பெற்றோர், கதவை உடைத்து கொண்டு உள்ளே போய் பார்த்தனர்.. அங்கே கிருஷ்ணா ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அலறினர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

தகவலறிந்து தக்கலை காவல்துறையினர் வந்துவிட்டனர்.. உடலை மீட்டு விசாரணையும் ஆரம்பித்தனர்.. ஆனால் டாக்டர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்றே தெரியவில்லை.. மனைவியுடன் நன்றாகதான் பேசினார் என்கிறார்கள்.. இன்னொரு பக்கம் அவருடன் கருத்து வேறுபாடு என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் வயிறு வலி காரணமாக டாக்டர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர்.

எதுவாக இருந்தாலும் கிருஷ்ணாவின் மனைவி ஆர்யாவிடம் விசாரணை நடத்தினால்தான் எல்லா விஷயமும் தெரியவரும் என்பதால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்யாணம் ஆகி 9 மாசமே ஆன நிலையில் டாக்டரின் இந்த தற்கொலை பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version