
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த காத்தவராயன் என்பவருக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த காத்தவராயன் தங்களது முதல் மகள் சித்ராவுடன் தங்கி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு வேலைபார்த்துவந்த ஹென்றி என்ற இளைஞருக்கு, சித்ராவுக்கு காதல் மலர்ந்துள்ளது.
6 மாத காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் சித்ரா கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் வருவதை ஒட்டி தனது வீட்டிற்கு வருமாறு மனைவி சித்ராவை ஹென்றி கேட்டுள்ளார்.
ஆனால், மகள் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி சித்ராவின் பெற்றோர் அவரை அனுப்ப மருத்துள்ளனர்.
இந்நிலையில் சித்ராவின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் தனது வீட்டிற்கு செல்வது குறித்து ஹென்றி மீண்டும் சித்ராவிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அவரும் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹென்றி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் சித்ரா மயங்கி விழுந்துள்ளார். தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்த ஹென்றி தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் .
மயக்கம் தெளிந்து சித்ரா சிறிது நேரத்தில் கண்முழிக்க, கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார்.
சிதறவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சித்ராவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.