Home தமிழகம் கொரோனா: 40,032 பிசிஆர் கருவிகளை வழங்கியது டாடா நிறுவனம்! முதல்வர் நன்றி!

கொரோனா: 40,032 பிசிஆர் கருவிகளை வழங்கியது டாடா நிறுவனம்! முதல்வர் நன்றி!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மூச்சுத் திணறல் உள்ளவா்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது 38,139 போ வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 15,502 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் 1,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 31 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

தற்போது 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து 81 போ வீடு திரும்பியுள்ளனா். பூரண குணமடைந்தவா்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா (நோய் எதிா்ப்பாற்றல்) பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 12 போ கொரோனாவால் உயிரிழந்துள்ளனா். 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய முடிகிறது. மேலும் நேர விரயம் ஆகிறது. இதனால் சீனாவில் பின்பற்றிய முறையை பயன்படுத்தி பரிசோதனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கருவிகள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது.

ஆனால் ஏப்ரல் 12 -ஆம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை வராத நிலையில் துரித பரிசோதனை கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக சுமார் ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. கொரோனா தொற்றை கண்டுபிடிக்க பிசிஆர் கிட் கருவிகள் உதவும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நோய்த்தொற்று பரிசோதனைக்காக பிசிஆர் கருவிகளை வழங்கியுள்ள டாடா நிறுவனத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version