ஏப்ரல் 21, 2021, 11:20 காலை புதன்கிழமை
More

  வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

  job-in-home

  ஐ.டி மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலக்கட்டம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலம் முன்னர் ஜூலை 31 ஆம் தேதி வரை இருந்தது.

  கோவிட் 19 தொற்று நோய் பரவலை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வேலை செய்ய வசதியாக 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பிற சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தளர்வுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தொலைதொடர்புத் துறை நேற்று இரவு டிவீட்டில் தெரிவித்துள்ளது.

  தற்போது ஐ.டி பணியாளர்களில் சுமார் 85 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர், மேலும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்பவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.

  முன்னதாக மார்ச் மாதம் தொலைதொடர்புத் துறை, வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கான காலக்கெடுவை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிருந்தது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இந்தக் காலக்கெடு மேலும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »