29/09/2020 1:48 PM

100 சதவீத கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: நீதி மன்றம்!

சற்றுமுன்...

முதல்வர் வேட்பாளர் யார்? முரண்டு பிடிக்கும் அரசியல்! ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்!

அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்! சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை!

கௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.
education fee

நீதிமன்ற உத்தரவையும் மீறி 100 சதவீத பள்ளி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கட்டணங்களை கட்ட வற்புறுத்தும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையில் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி தனியார் பள்ளிகள் தங்களிடம் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் மூலமாக 40 சதவீதம் கல்வி கட்டணத்தை பெற்று கொள்ளலாம் என்று ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை கட்ட தொடர்ச்சியாக பெற்றோர்களுக்கு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கும் போதே பெற்றோர் தரப்பிலும், வழக்கறிஞர் தரப்பிலும் பல புகார்கள் கொடுக்கப்பட்டது.

கடந்த 31ம் தேதி மீண்டும் ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. அதில் எந்தெந்த பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை கட்ட வற்புறுத்துகின்றார்களோ அவர்கள் தொடர்பான ஒரு முழு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்தெந்த பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்தினார்கள் என்பது தொடர்பாக ஒரு முழுமையான பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்றும், அதேவேளையில் அந்த பள்ளிகள் மீது நீதிமன்ற உத்தரவிற்கு பின்பாக அவர்கள் எடுத்த நடவடிக்கை தொடர்பாக முழு விவரங்களை வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்!

இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »