28/09/2020 7:49 AM

வெடி மருந்தால் உயிரிழந்த பசு! இறுதி நிலையில் கன்றுக்கு பால் ஈந்த தாய்மை!

சற்றுமுன்...

வேளாண் மசோதாக்களுக்கு குடியர்சுத் தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின!

பசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு!

இந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை

செப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு!

இதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது

பிரதமர் மோடியின் மனதின் குரல்! கதைகள் வாயிலான கலாசாரம்!

தனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை

பாஜக., தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழர்களுக்கு இடமில்லை!

பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து வந்த ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லை.
cow-mysore
File pic

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள செங்கல்படுகை பகுதியைச் சேர்ந்த விவசாயி முகமது ஜாபர் அலி. அவர், தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டுள்ளார். மேலும், தனது தோட்டத்தில் 6 பசுமாடுகள் மற்றும் ஒரு காளை மாட்டை அவர் வளர்த்து வருகிறார். அந்த மாடுகள் தினசரி மேய்ச்சலுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்றதில், ஒரு பசுமாடு மட்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, ஜாபர் அலி நண்பர்களின் உதவியுடன் அந்த பசு மாட்டை பல்வேறு பகுதிகளில் தேடினார்.

அப்போது, கல்லாறு பகுதியில் பலத்த காயங்களுடன் அந்த பசு நின்று கொண்டிருந்ததை அவர்கள் கண்டுள்ளனர்.

காட்டுப் பன்றிக்கு வைக்கப்படும் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு படுகாயமடைந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஜாபர் அலி வனத்துறைக்கு புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வனத்துறை சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி வெடித்ததில் மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்துள்ளது. பார்ப்பதற்கே மிகவும் சோகமாக இருந்தது.

ஆனால், அந்த நிலையிலும் காயமடைந்த பசு, தன்னுடைய கன்றுக்கு பால் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், காயமடைந்த பசு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. பசுவின் மரணம் ஜாபர் அலி குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பன்றிக்கு அவுட்டுக்காய் வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, யானைகள், மாடுகள் அவுட்டுக்காயால் உயிரிழந்துள்ளன. தற்போது, உயிரிழந்த மாடும் காப்புக்காட்டுக்கு 2 கி.மீ தொலைவில்தான் அவுட்டுக்காய் உண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவே பசுவுக்கு பதிலாக யானைக்கு இந்த நிலை நேர்ந்திருந்தால், மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டிருக்கும். ஆனால், இறந்தது பசு என்பதால் விஷயம் பெரிதாகவில்லை.

அவுட்டுக்காய் வைத்து, பசுவின் மரணத்துக்கு காரணமானவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள அவுட்டுக்காய்களை அகற்றுவதுடன், இனி அந்தப் பகுதியில் அவுட்டுக்காய் வைப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்” என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஈவேரா., முன்னிலையில்… ஜெயகாந்தனின் ‘தைரிய’ உரை வீச்சு!

நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத

சமையல் புதிது.. :

சினிமா...

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »