
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் வசித்து வரும் கிருபா என்பவரது மகள் களவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். பள்ளி விடுமுறை காரணமாக பேரன் பேத்திகள் பாட்டி புஷ்பா வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், பாட்டியுடன் சேர்ந்து மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் இன்றுகுளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குட்டையில் மூழ்கி புஷ்பா (60) வினோதினி (16) ஷாலினி (14) கிருஷ்ணன் (8) உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.