மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் இதனால் காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அவர்களின் உடமைக்கும் உயிருக்கும் இழப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. நீர்வரத்து 60 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட உள்ளது .
எனவே தமிழக அரசின் நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அங்கு வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைக்கான முன்னெச்சரிக்கை எடுத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர்,திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.