
சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் அமைக்க ப்பட்டுள்ளஅகழ் வைப்பகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.18.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கீழடி அகழ் வைப்பகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த அகழ் வைப்பகம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 31 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு கட்டட கலையில் அமைப்பட்டுள்ளது.
இதில், கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த அகழாய்வில் கிடைத்த 2,600 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கீழடி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இந்த அருங்காட்சியம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. 8 கட்ட அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், திமுக மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.